”இப்படி செஞ்சிருந்தா கண்டிப்பா விபத்தை தடுத்திருக்கலாம்” - பாதுகாப்பு நிபுணர் சொல்லும் விளக்கம்!

இந்த விபத்து நடந்ததற்கு முழு காரணமே சிக்னலிங் தான்; 360 டிகிரில் அத்தனை டிராக்கையும் கண்காணித்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில்களை நிறுத்தி இருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதை தவிர்த்து இருக்க முடியும்.

ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தை தடுத்திருக்க முடியுமா? என்பது குறித்து ரயில்வே துறையில் பணி புரியும் சேப்டி இன்ஜினியரிடம் (பாதுகாப்பு நிபுணர்) நேரலையில் கேட்டப்பொழுது,

“தற்பொழுது அதிகாரபூர்வ இறப்பானது 280 ஐ கடந்து வருகிறது. இந்த இறப்பானது அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இன்னும் மீட்பு குழு களத்தில் தனது வேலையை செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்து இது இந்தியாவில் நடந்துள்ள மிகப்பெரிய விபத்தாகும். இது விபத்து என்று சொல்வதை விட கோர தாண்டவம் என்றே சொல்லலாம்.

இந்த விபத்து நடந்ததற்கு முழு காரணமே சிக்னலிங் தான்; 360 டிகிரில் அத்தனை டிராக்கையும் கண்காணித்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில்களை நிறுத்தி இருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதை தவிர்த்து இருக்க முடியும்.” என்றார்.

முன்னதாக ரயில்வே ஊழியர் பேசியபொழுது, அவர் தந்த விளக்கத்தின் படி, சரக்கு ரயிலானது தடம் புரண்டு அடுத்த டிராக்கில் நிலைக்கொண்டிருந்த சமயம் அவ்வழியாக வந்த ஹவுரா எக்ஸ்பிரஸானது நிலைக்கொண்டிருந்த பெட்டியின் மீது மோதி விபத்துக்குள்ளாது, இந்த விபத்தானது ஒரிரு நிமிடங்களில் நடந்திருக்கும்” என்றார்.

இத்தகைய விபத்தை தடுத்திருக்கமுடியாதா?... என்ற கேள்விக்கு ”இந்தியாவின் ரயில்வே துறை மிகவும் பாதுகாப்பைக்கொண்டது. எல்லோராலும் பாராட்டப்பட்ட துறையும் கூட.. இருந்த போதிலும் நிறைய மார்டன் டெக்னிக்கல் உலகம் முழுவதும் இருக்கிறது. அதை அறிமுகம் செய்யவேண்டும் “

இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள.. வீடியோவை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com