”அது fake video; அதை யாரும் நம்பாதீர்கள்” ராஷ்மிகாவைத் தொடர்ந்து கலக்கமடைந்த சச்சின் டெண்டுல்கர்!

AI தொழில்நுட்பத்தால் பாதிப்புக்குள்ளான நடிகை ராஷ்மிகா மந்தனாவைப்போல் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்ட்விட்டர்

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று பல்வேறு விஷயங்கள் விரல் நுனியிலேயே செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக டிரெண்டிங்கில் உள்ள ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜியைப் பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோவைச் சுலபமாக மற்றொருவரின் முகத்தை வைத்து மார்பிங் செய்துவிட முடியும். இந்த தொழில்நுட்பத்தால் பல சைபர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை இணைத்து மார்பிங் செய்து இணையத்தில் கசியவிட்டிருந்தனர்.

இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், ’புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதள நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியிட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ எனவும் எச்சரித்திருந்தது. ராஷ்மிகா மந்தனா தவிர காஜோல், பிரியங்கா சோப்ரா, ரத்தான் டாடா ஆகியோரின் போலி காணொளிகளும் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர்
"நான் வேதனைப்படுகிறேன்; பயமாக இருக்கிறது" - Deep fake வீடியோ.. நடிகை ராஷ்மிகா மந்தனா உருக்கமான பதிவு

இந்த நிலையில், இதேபோன்ற பிரச்னையை, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துள்ளார். இதுதொடர்பான வெளியான fake வீடியோவில், சச்சின் தனது மகள் சாராவை பற்றிப் பேசுவதுபோல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் தனது மகள் ஆன்லைன் வீடியோ கேம் மூலம் பல பணத்தை சம்பாதித்து வருவதாகவும் இதனை ரசிகர்கள் நீங்களும் பயன்படுத்தலாம் என்று சச்சின் கூறுவதுபோல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வெளியான பிறகு சச்சின் டெண்டுல்கர் அந்த வீடியோவிற்கும், தனக்கு எந்த தொடர்பும் இல்லை. அது போலியானவை என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக சச்சின், "இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இதுபோன்ற வீடியோக்கள், விளம்பரங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் புகாரளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடக தளங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் புகார்களுக்கு பதிலளிக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் ஆழமான போலிகள் பரவுவதைத் தடுக்க அவர்களின் முடிவில் இருந்து விரைவான நடவடிக்கை முக்கியமானது”என்று சச்சின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: காதல் படுத்தும் பாடு! |காதலிக்காக பெண் வேடத்தில் தேர்வெழுதிய ஆண் நபர்..காட்டிக் கொடுத்த பயோமெட்ரிக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com