காதல் படுத்தும் பாடு! |காதலிக்காக பெண் வேடத்தில் தேர்வெழுதிய ஆண் நபர்..காட்டிக் கொடுத்த பயோமெட்ரிக்!

பஞ்சாப்பில் பெண் வேடமிட்டு தேர்வு எழுத வந்த நபர் ஒருவர் பிடிபட்டார்.
பிடிபட்ட ந்பர்
பிடிபட்ட ந்பர்ட்விட்டர்

பஞ்சாப்பின் பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பாபா பரீத் பல்லைக்கழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில், சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் தேர்வெழுதி உள்ளார். இளம்பெண் போன்று காணப்பட்ட அவரிடம் பயோமெட்ரிக் உபகரணங்கள் உதவியுடன் சோதனை நடத்தியபோது, அவர் ஆண் என்பதும் அவருடைய பெயர் ஆங்ரேஸ் சிங் என்பதும் தெரிய வந்தது.

பசில்கா பகுதியைச் சேர்ந்த அவர், ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகளை மோசடியாகப் பயன்படுத்தி போலியான அடையாள அட்டைகளை உருவாக்கி தேர்வு எழுதியது விசாரணையில் தெரிய வந்தது. தன்னுடைய காதலி பரம்ஜித் கவுருக்காக அவர் இத்தகைய செயலை செய்துள்ளார்.

முன்னதாக அவர் பெண்கள் உடையை அணிந்திருந்த அவர், நெற்றியில் பொட்டுடன், கையில் சிவப்பு வளையல்கள் அணிந்திருந்தார். மேலும், உதட்டுச் சாயம் பூசியிருந்தார். இதனை தொடர்ந்து, போலீசார் அவர்மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com