அயோத்தி ராமர் - மோகன் பகவத்கோப்புப்படம்
இந்தியா
"ராமர் கோயில் விவகாரத்தை முன்மாதிரியாக கொண்டு.." - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அறிவுரை!
ராமர் கோயிலை விவகாரத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மற்ற பகுதிகளில் சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என இந்து மத தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
ராமர் கோயிலை விவகாரத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மற்ற பகுதிகளில் சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என இந்து மத தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “ராமர் கோயில் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம், அங்கு கோயில் கட்ட வேண்டும் என இந்துக்கள் விரும்பினர். ஆனால் தற்போது பகைமை, வெறுப்புகளால் இதே போன்ற கோரிக்கைகளை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் காணமுடிகிறது” என கவலை தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் சம்பலில் ஏற்பட்டுள்ள வன்முறையை மறைமுகமாக குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
இந்தியாவின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே அமைதியை நிலை நாட்ட முடியும் என உலகம் நம்புவதாகவும், அந்த பொறுப்பை நிறைவேற்றுவது நமது கடமை என்றும் பகவத் குறிப்பிட்டுள்ளார்.