ரயில் கல்வீச்சுAI
இந்தியா
இந்தியன் ரயில்வே : அதிகரிக்கும் கல்வீச்சு சம்பவங்கள்.. வெளியான ரிப்போர்ட்!!
இந்தியாவில் ரயில்கள் மீதான கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது குறித்த தகவல் தொகுப்பை காணலாம்.
Summary
2021 முதல் 2025 வரை ரயில்கள் மீதான கல்வீச்சு சம்பவங்களில் 12,157 வழக்குகள் பதிவாகி, 8,441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்கள் மீதான கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 12,157 சம்பவங்கள் பதிவாகி 8,441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக 2025 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் மட்டும் 1,698 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ரயில்ANI
வந்தே பாரத், ஸ்வர்ண சதாப்தி, துரந்தோ போன்ற அதிவிரைவு பிரீமியம் ரயில்களும் இத்தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. கடந்த அக்டோபர் 24 அன்று குஜராத் மாநிலத்தில், வந்தே பாரத் ரயில் மீது விளையாட்டாக வீசினோம் என்று கூறி கல் எறிந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

