Rising Crude-Linked Raw Material Costs Push Up Soap, Shampoo  Prices
FMCG products web

கச்சா எண்ணெய் விலை உயர்வு.. சோப்பு, ஷாம்பு மற்றும் சலவைத் தூள் - விலை உயர்வு?

கச்சா எண்ணெயுடன் தொடர்புடைய மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்க, நுகர்பொருள் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலைகளை மாற்றியமைத்து வருகிறது.
Published on

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் உலக அளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எல்.பி.ஜி. விநியோகத் தடைகள் மற்றும் தாமதங்களால் ஏற்பட்ட கடும் பாதிப்பை இந்திய குடும்பங்கள் ஏற்கனவே சந்தித்து வருகிறது. அரசு எல்பிஜி பற்றாக்குறை இல்லை என்று கூறிவந்தாலும், களத்தில் ஏற்படும் தாமதங்கள், நீண்ட காத்திருப்பு காலங்கள் மற்றும் விநியோகங்களில் நெருக்கடிகள் நிலவி வருகின்றன.

crude oil
Crude Oilweb

இந்நிலையில், கச்சா எண்ணெய் சார்ந்த மூலப்பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள கடும் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக நுகர் பொருள் நிறுவனங்கள் தயாரிப்புகளின் விலையிலும், எடையிலும் மாற்றம் செய்து வருவதுடன், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில், நுகர்பொருள் நிறுவனங்கள் நங்களது தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க தயாராகி வருகிறது.

Rising Crude-Linked Raw Material Costs Push Up Soap, Shampoo  Prices
எரிபொருள் விலை உயர்வு.. நெருக்கடியில் ஏர் இந்தியா.. தினமும் 100 விமானங்கள் ரத்து!

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களால் ஏற்பட்ட இடையூறுகளால் செலவு 8-10 சதவீத அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து, ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ஏற்கனவே தனது தயாரிப்பு பொருள்கள் அனைத்திலும் 2-5 சதவீதம் வரை விலை உயர்வை அமல்படுத்தியுள்ளது.

FMCG products
FMCG products web

நுகர்பொருள் நிறுவனங்கள் குறைந்த விலையிலான சிறிய பாக்கெட்டுகளின் (sachets) எடையைக் குறைக்கும் அதே வேளையில், பெரிய அளவிலான பேக்குகளின் (pack) விலையை உயர்த்தும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளன.

Rising Crude-Linked Raw Material Costs Push Up Soap, Shampoo  Prices
மீண்டும் போர் | அமெரிக்கப் படைகளுக்கு ‘மாரடைப்பு ஏற்படுத்தும் ஆயுதம்..' மிரட்டும் ஈரான்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com