9,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் அரிசி சாகுபடி.. ஆராய்ச்சியில் தகவல்!
இந்தியாவில் அரிசி 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்பட்டதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டோரியன் கே.ஃபுல்லரின் ஆராய்ச்சிகள் கூறுகிறது. தொல்பொருள் மற்றும் தாவரவியல் ஆய்வாளரான இவர், அரிசி பயிரிடப்பட்டதன் தொடக்கம் எது என்பதை தனது ஆராய்ச்சி மூலம் விவரித்துள்ளார். அதன்படி, ஆரம்ப காலத்தில் ஆப்பிரிக்க அரிசி மற்றும் ஆசிய அரிசி என 2 தனித்துவமான இனங்கள் இருந்ததாக அவரின் ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய அரிசியில், இண்டிகா மற்றும் ஜபோனிகா என 2 வகைகளில் அரிசி பயிடப்பட்டிருப்பதாகக அவரது ஆய்வுகள் கூறுகின்றன.
ஆரம்பகால சான்றுகளின் அடிப்படையில், சீனாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அரிசி சாகுபடி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அரிசி பயிரிடப்பட்டிருப்பதற்கான சான்றுகள் இருப்பதாக டோரியன் கே.ஃபுல்லரின் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வட இந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக கங்கை நதிப் படுகைப் பகுதிகள், மேல் கங்கை- யமுனைப் பகுதிகளில் காட்டு அரிசியின் ஆரம்பகால பயன்பாடு தொடங்கப்பட்டிருப்பதற்கான சான்றுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.