விஜயசாய் ரெட்டி
விஜயசாய் ரெட்டிமுகநூல்

அரசியலிலிருந்து விலகுகிறாரா விஜயசாய் ரெட்டி?

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்...
Published on

மாநிலங்களவையும் எம்.பி.யும், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான விஜயசாய் ரெட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகக் கூறியுள்ளார். வேறு எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர், பதவி, பணம், அதிகாரம் எதிர்பார்த்து ராஜினாமா செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

விஜயசாய் ரெட்டி
சென்னை: போதைப் பொருள் விற்பனை செய்ததாக 5 பேர் கைது

அரசியலில் இருந்து விலகுவது முற்றிலும் தனது தனிப்பட்ட முடிவு எனக் கூறியுள்ள விஜய்சாய் ரெட்டி, இதில் எந்தவித அழுத்தங்களும் இல்லை என விளக்கமளித்துள்ளார். 3 தலைமுறைகளாக தன் மீது நம்பிக்கை வைத்து ஆதரித்த ஒய்.எஸ். குடும்பத்தினர், கட்சி தொண்டர்கள், மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், தனது கவனம் விவசாயத்தில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com