சென்னை: போதைப் பொருள் விற்பனை செய்ததாக 5 பேர் கைது
செய்தியாளர்: சாந்தகுமார்
சென்னை வேளச்சேரி சீனிவாச நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் மணிகணடன் (34), இவர், மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வெளி மாநிலங்களில் இருந்து, வாங்கி வந்து நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த வேளச்சேரி தனிப்படை போலீசார் சீனீவாச நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காரை சோதனை செய்த போது, காரில் இருந்தபடி போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது இதையடுத்து மணிகண்டன் உடன் சந்தோஷ்குமார் (32), ராகுல்ராஜ் (32), ஜித்தேஷ் (22), பத்ரு சுஹைல் (22), ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன், 36 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள், கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.