“வேறு வழியில்லாமல் கொண்டு வந்துள்ள அஜண்டா” ரவிக்குமார் எம்.பி. விமர்சனம்

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடர் குறித்த நிகழ்ச்சி நிரலை நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

75 ஆண்டு கால வரலாறு கொண்ட நாடாளுமன்றத்தில், வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், கூட்டத்தொடர் குறித்த நிகழ்ச்சி நிரலை நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதில் "நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்த உங்களது அனுபவங்களை பகிரலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசிக எம்.பி. புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக தனது கருத்துகளை தெரிவித்தார்.

நம்மோடு பேசிய அவர் “இப்படி சொல்வதன் மூலம் (அனுபவங்களை பகிரலாமென), 75 ஆண்டுகாலமாக இந்தியாவில் இருந்த நாடாளுமன்ற முறை போதுமானதாக இல்லை; நாம் இதை கைவிட்டுவிட்டு, அதிபர் ஆட்சி முறைக்கு போகலாம் என்று தங்களின் கருத்தை முன்வைக்கப் போகிறார்களா ஆளுங்கட்சியினர்?” எனக்கூறி, பல விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறியவற்றை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் முழுமையாக காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com