சிஆர்பிஎஃப் வீராங்கனை
சிஆர்பிஎஃப் வீராங்கனைமுகநூல்

வரலாற்றில் முதல்முறையாக... குடியரசுத் தலைவர் மாளிகையில் சிஆர்பிஎஃப் வீராங்கனையின் திருமணம்!

இந்திய நாட்டின் முதல் குடிமகள் வாழும் வீடான குடியரசு தலைவரின் மாளிகையில்தான், சிஆர்பிஎஃப் வீரர்களின் திருமணம் நடைபெற இருக்கிறது.
Published on

முதல்முறையாக குடியரசுத் தலைவர் மாளிகையில் சிஆர்பிஎஃப் வீராங்கனைக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. மேலும், இது வரலாறு படைக்கவிருக்கும் ஒன்றாகவும் மாறியுள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் சிஆர்பிஎஃப் வீராங்கனையாக பணியாற்றி வருபவர், பூனம் குப்தா.. பிப்ரவரி 12 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரராக இருக்கும் துணைத் தளபதி அவினாஷ் குமாருடன் திருமணம் நடக்க இருக்கிறது.

இந்திய நாட்டின் முதல் குடிமகள் வாழும் வீடான குடியரசு தலைவரின் மாளிகையில்தான், இவர்களின் திருமணம் நடைபெற இருக்கிறது என்பது இங்கு பேசுபொருளான ஒன்று.

திருமணத்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி?

கிட்டத்தட்ட 300 ஏக்கர் பரப்பளவை கொண்டும், 200000 சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்து காணப்படும் ராஷ்டிரபதி பவனில், நான்கு தளங்களில் 340 அறைகள் இருக்கிறது. நாட்டில் இருக்கும் தலைவர்களின் இல்லங்களை ஒப்பிடுகையில், இத்தாலியின் குய்ரினல் அரண்மனைக்குப் பிறகு ராஷ்டிரபதி பவன்தான் இரண்டாவது பெரிய இல்லமாகும்.

இத்தகையை பெருமைகளை கொண்டிருக்கும் இந்த இல்லத்தில் சிஆர்பிஎஃப் வீராங்கனையின் திருமணத்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுந்திருக்கும்..

சமீபத்தில் டெல்லியில் நடைப்பெற்ற 74 ஆவது குடியரசு தின பேரணியில் அனைத்து மகளில் கான் டினெட் படைகளுக்கும் தலைமையேற்று வழிநடத்தியவர் பூனம் குப்தா. 2018 UPSE CAPF தேர்வில் இவர் 81 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

பூனம் CAPF அதிகாரி மட்டுமல்ல... பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புக்கான வாதத்திலும் தனது தலையீட்டை கொடுத்திருக்கிறார்.

பணியில் அவருடைய அர்ப்பணிப்பு, தொழில்திறன் , நடத்தை விதிகளை பின்பற்றுதல் ஆகியவற்றின் காரணமாகவே இவரை பெருமைப்படுத்தும் விதமாக இவரது திருமணத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குடியரசு தலைவர் மாளிகையில் நடத்த ஏற்பாடு அனுமதி வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

சிஆர்பிஎஃப் வீராங்கனை
Headlines | இரவிலும் தொடர்ந்த போராட்டம் முதல் கழிவுநீர் குழாயில் விழுந்த 2 வயது குழந்தை வரை!

தனிநபரின் நிகழ்ச்சி ஒன்று குடியரசு தலைவரின் மாளிகையிலேயே நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.. இதன் முலம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்கள் சிஆர்பிஎஃப் ஜோடிகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com