Headlines | இரவிலும் தொடர்ந்த போராட்டம் முதல் கழிவுநீர் குழாயில் விழுந்த 2 வயது குழந்தை வரை!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67 புள்ளி 97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவானது. அதில், 60 புள்ளி 42 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தகவல். 40 தொகுதிகள் முதல் 60 தொகுதிகள் வரை பாஜக கைப்பற்ற வாய்ப்பு.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நெல்லை வருகை.இதனால், மாநகரப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.
கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் மூன்று பேர் கைது.வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு.
பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்படியே காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். சிறுமிக்கு கரு கலைப்பு நடந்ததாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
போச்சம்பள்ளி வழக்கில் கைதான மூவருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
''மூன்று தொழிலாளர்களின் பணியிடை நீக்கத்தை திரும்ப பெறக்கோரி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி. இரவிலும் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடர்ந்த சாம்சங் ஆலை ஊழியர்கள்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெண் மரணம். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.
திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிக்கும் வெளியூரை சேர்ந்தவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் விளக்கம்.
திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் சார்பில் இன்று மதநல்லிணக்க வழிபாடு நடைபெறும் என கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு.
யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு. டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக எம்.பி. க்கள் இன்று போராட்டம்.
அரசு அலுவலகங்களில் CHAT GPT, DEEP SEEK செயலிகளை பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு.
குஜராத் மாநிலம் சூரத்தில் கழிவுநீர் குழாயில் 2 வயது குழந்தை விழுந்ததால் பரபரப்பு. குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்.
அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அர்ஜென்டினா. கோவிட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை சரியாக கையாளவில்லை என குற்றம்சாட்டி விலகல்.
நாக்பூரில் இன்று இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி. வெற்றி பயணத்தை இந்திய அணி தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் இன்று ரிலீஸ். பல்வேறு திரையரங்குகளில் இரவு முதலே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்.