ரக்ஷா பந்தன் - சகோதரர்களுக்கு ஹெல்மெட்டை பரிசாக அளிக்க வேண்டுகோள்
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக பிரபல மணல் சிற்பக்கலைஞர் ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
ரக்ஷா பந்தன் என்பது பெண்கள் தங்களை பாதுகாக்கும் சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகும். இந்த பண்டிகையின் போது கையில் ராக்கி கட்டி பரிசு பொருட்களை பரிமாறிக்கொள்வதும் வழக்கம். இந்நிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அந்த சிற்பத்தில், ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, ஹெலட்மெட்டை பரிசாக அளித்து, சகோதர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்ஷன் பட்நாயக், நாட்டு நடப்புகள், இயற்கை பேரழிவுகள் மற்றும் தலைவர்கள் குறித்த பல்வேறு நிகழ்வுகளை மணலில் சிற்பங்களாக உருவாக்குவது வழக்கம்.