மணிப்பூர் முதல்வர் மீது தாக்குதல் நடத்த முயற்சி.. நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?

தொடர் வன்முறைகள் நிகழ்ந்து வரும் சூழலில், காஷ்மீர் மாநில காவல்துறை அதிகாரி மணிப்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத சம்பவங்களை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற ஸ்ரீநகர் காவல்துறை கண்காணிப்பாளரான ராகேஷ் பல்வாலை மணிப்பூருக்கு மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே மணிப்பூர் மாநில காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ராகேஷ் பல்வால், ஸ்ரீநகரில் சிறுபான்மையினர் மற்றும் காவல்துறையினர் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்.

மணிப்பூர் முதல்வர் மீது தாக்குதல் முயற்சி
மணிப்பூர் வன்முறை: மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அனுப்ப மத்திய உள்துறை முடிவு.. யார் இந்த ராகேஷ் பல்வால்?

இதனிடையே இம்பாலில் உள்ள அம்மாநில முதல்வர் பிரோன்சிங் வீட்டை நோக்கி பேரணியாக வந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரது பூர்வீக வீட்டை தாக்கும் நோக்கில் போராட்டக்காரர்கள் வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை சம்பவம், போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல், கலவரம் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் இவ்விஷயத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com