56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பிப்.27-ல் தேர்தல்!

ஆந்திரா, தெலங்கானா உட்பட 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.
 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு
மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வுபுதிய தலைமுறை

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்களை தேர்வு செய்வற்கான தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதற்கு அடுத்த நாள் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு
ட்ரோல் செய்வதற்காக சங்கி என்கிறார்கள்.. சங்கி என்பதற்கு இதுதான் அர்த்தம்.. வானதி சீனிவாசன் பளீச்

பிப்ரவரி 20ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும். இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவிக்கையில், “27ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்” தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 10 பதவியிடங்களுக்கும், பீகார், மகாராஷ்டிராவில் தலா 6 பதவியிடங்களுக்கும், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 5 பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

கர்நாடகா, குஜராத்தில் தலா 4 பதவியிடங்களுக்கும், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பதவிக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com