மாஸ்க் அணிவதை சட்டமாக்குகிறது ராஜஸ்தான்.!

மாஸ்க் அணிவதை சட்டமாக்குகிறது ராஜஸ்தான்.!
மாஸ்க் அணிவதை சட்டமாக்குகிறது ராஜஸ்தான்.!

மாஸ்க் அணிவதை  ராஜஸ்தான் அரசு சட்டமாக்கவுள்ளது

உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. வெளியே செல்லும்போது நம்மை பாதுகாக்க மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. நம் வாழ்க்கை முறையில் மாஸ்க் என்பதும் கட்டாயமாகியுள்ளது. இந்த சூழ்நிலையில்
விதவிதமான வித்தியாசமான மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மாஸ்கின் தேவையை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் பொதுமக்கள்
பலர் மாஸ்க் அணிவதில்லை என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.

அப்படி அணிந்தாலும், சரியாக மூக்கை மூடி அணியாமல் வாய் வரை அணிவது, தாடையில் அணிவது என மக்கள் பொறுப்பற்று செயல்படுவதாகவும்
கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் அரசு மாஸ்க் என்பதை தடுப்பு மருந்தாகவே பார்க்கத் தொடங்கியுள்ளது. அதாவது மாஸ்க் அணிவதை
சட்டமாக்குகிறது ராஜஸ்தான் அரசு.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மாஸ்க் அணிவதை சட்டமாக்கப்போகும் முதல் மாநிலம்
ராஜஸ்தான் தான். கொரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் தடுப்பூசி என்பது முகக்கவசம் தான். அது தான் நம்மை காக்கும். 'கொரோனாவுக்கு
எதிரான மாஸ்க் இயக்கம்' மூலம் மாஸ்க் அணியும் சட்டம் இயற்றப்படவுள்ளது. இதன் மூலம் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும் என
குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com