உ.பிமுகநூல்
இந்தியா
உ.பி | ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கட்டட விபத்து... வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!
உத்தரப் பிரதேசத்தில் ரயில் நிலைய கட்டட பணியின் போது திடீரென ஏற்பட்ட விபத்து... விபத்தில் சிக்கியிருந்த 20க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்பு.
உத்தர பிரதேசத்தில் கட்டுமானப்பணியின்போது ரயில் நிலைய கட்டடம் திடீரென இடிந்து விழுந்த நிலையில், அதில் சிக்கியிருந்த 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் ரயில் நிலையத்தில், புதிய கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த கட்டடம் நேற்று தீடிரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் 35 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாமென கருதப்படும் நிலையில், அதில் 23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், நிவாரணமாக வழங்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் ஒருவர், நூலிழையில் தப்பிப்பது இடம்பெற்றுள்ளது.