“மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ 1 லட்சம்” - ராகுல்காந்தி வாக்குறுதி!

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு தலா ஒரு லட்சரூபாய் வழங்கும் என அறிவித்துள்ளார்.
ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே
ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கேpt web

பெண் வாக்காளர்களை கவரும் வகையில், பாரதிய ஜனதா கட்சி நாரிசக்தி என்று முழக்கம் எழுப்புவருகிறது. மேலும் சிலிண்டர் விலை குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுவருகிறது. இந்நிலையில்,

மத்தியில் ஆட்சி அமைந்த உடன் நாட்டில் உள்ள ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட ஐந்து முக்கிய அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதன்படி இங்கு

- ஆண் வாக்காளர்கள் 3,30,96,330;

- பெண் வாக்காளர்கள் 3,41,85,724

- மாற்று பாலினத்தவர்கள் 8,294 பேர்

ஆக மொத்தமாக 6,18,90,348 உள்ளனர்.

இதேபோன்றே பல்வேறு மாநிலங்களில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்களர்களது எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதை கருத்தில்கொண்டே கடந்த ஐந்து மாநில தேர்தலிலும் கூட பெண் வாக்களர்களை கவரும் வகையில் இரு தேசிய கட்சிகளும் வாக்குறுதிகளை அளித்திருந்தன. பெண் வாக்களர்களுக்கான வாக்குறுதிகள் 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இளைஞர்களுக்கான வாக்குறுதிகளும் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் மெய்யாகி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முழு அளவில் தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு பிரிவினருக்குமாக தனித்தனியே வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். இதற்கு முன்பாக இளைஞர்கள் மற்றும் பழங்குடியினருக்கான தனித்தனி வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பெண்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாடு முழுவதும் பாரத் ஒற்றுமை நியாய யாத்திராவை மேற்கொண்டுள்ள நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த யாத்திரை நடந்து வருகிறது. நேற்று துலே மாவட்டத்தில் நடந்த பெண்களின் உரிமைகள் மற்றும் நீதிக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி பெண்களுக்கான ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்.

ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே
மீண்டும் MLA ஆனார் பொன்முடி... நாளை அமைச்சராக பதவியேற்பு? கடைசி நேரத்தில் ஆளுநர் வைத்த ட்விஸ்ட்!

மேலும்...

நாட்டில் உள்ள ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ராகுல் அறிவித்தார். மேலும், மத்திய அரசு பணியிடங்களில் புதிதாக நிரப்பப்படும் பணிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

அங்கன்வாடி ஆஷா மற்றும் மதிய உணவு பணியாளர்களின் மாத ஊதியத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கி வழங்கப்படும். பெண்களுக்கான கல்வியை உறுதி செய்யவும் பெண்களின் சட்டப்பூர்வ உரிமைகளை அமல்படுத்துவதில் அவர்களுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அதிகாரி நியமனம் செய்யப்படுவார். நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

அதன்படி நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசு சார்பில் பெண்கள் விடுதி அமைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு சுதந்திரப் போராட்ட தியாகி சாவித்திரி பூலேவின் பெயர் வைக்கப்படும் என்ற ஐந்து முக்கிய திட்டங்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளால் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுப் பெண்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்களின் சுமைகள் அதிகரித்துள்ளன” என தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் ஆட்சி அமைத்த உடன் செயல்படுத்தப்படும் இந்த ஐந்து திட்டங்களும் பெண்களுக்கு வளமான எதிர்காலத்திற்கான கதவுகளை திறந்து விடும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். தற்பொழுது வழங்கப்படும் இந்த வாக்குறுதிகள் கல்லில் எழுதப்பட்ட வாக்கியங்களுக்கு சமமானது. எந்த கட்டத்திலும் இவற்றிலிருந்து நாங்கள் பின்வாங்கமாட்டோம்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

மல்லிகார்ஜூன கார்கே
மல்லிகார்ஜூன கார்கே

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் தளத்தில், “மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக அமல்படுத்துவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com