18 வது மக்களவை | எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறாரா ராகுல் காந்தி?

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை அக்கட்சி பெற்றுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ராகுல் காந்தி பெறவேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ராகுல் காந்தி - காங்கிரஸ்
ராகுல் காந்தி - காங்கிரஸ்முகநூல்

எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தின் முக்கியத்துவம் என்ன?

எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காரணம், இப்பதவியில் இருப்பவர் மத்திய அரசின் இலாக்கா கமிட்டிகளிலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரை நியமனங்களிலும், சிபிஐ, இடி போன்றவற்றின் இயக்குநர்களை தேர்ந்தெடுக்கும் குழுக்களிலும் இடம்பெறுவர். சுருக்கமா சொன்னால், அரசு சார்ந்து முடிவு எடுக்கப்படும் அனைத்து துறைகளிலும் எதிர்க்கட்சி தலைவரின் ஒப்புதல் இன்றி செயல்பட இயலாது. இந்த வகையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவது எதிர்க்கட்சி தலைவரின் பதவி.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

‘எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ராகுலே தகுதியானவர்’

2019 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அங்கீகாரத்தை பெறவில்லை. அப்போது ராகுல் காந்தி, காங்கிரஸின் தலைவராக இருந்தார். தோல்வியை ஏற்றுக்கொண்ட ராகுல், தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரத் ஜோடோ போன்ற யாத்திரையை மேற்கொண்டார். இன்று அதன்மூலம்தான் காங்கிரஸ் இழந்த செல்வாக்கை அவர் மீட்டு கொண்டு வந்திருக்கிறார். இதன் காரணாமாகவே தற்போது காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ராகுல் காந்தி - காங்கிரஸ்
நான்கு முறை முதல்வர்... மூன்று முறை பிரதமர்... மோடி கடந்து வந்த அரசியல் பாதை!

இந்தவகையில், பல ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸின் செல்வாக்கை பெற்று தந்த ராகுல் காந்திக்கு, எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தை அளிக்கும் வகையில், எதிர்க்கட்சி பதவியை அவருக்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

மறுப்பு தெரிவிக்கும் ராகும் காந்தி

ஆனால், ராகுல் காந்தி இதற்கு மும்முரம் தெரிவிக்காத நிலை உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கான காரணமாக காங்கிரஸ் கட்சி தெரிவிப்பது என்னவென்றால், கட்சி சார்ந்த பணிகளில் மட்டுமே ராகுல் காந்தி மும்மரம் காட்ட விரும்புகிறாராம்.

ராகுல் காந்தி - காங்கிரஸ்
கட்சிகள் முன்வைக்கும் ‘மாநிலங்களுக்கு சிறப்பு வகை அந்தஸ்து’ - கோரிக்கை! அதன் முக்கியவத்துவம் என்ன?

மேலும், இந்த ஆண்டில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளதால், களப்பணிகளில் ராகுல் காந்தி ஈடுபடுவது அக்கட்சியின் பலமாக பார்க்கப்படுகிறது.

மேலும் அரசியல் கட்சி சார்ந்த கூட்டங்களை நடத்தும் பணிகளை நடத்துவதற்கு மல்லிகார்ஜூன கார்க்கேவுக்கு ராகுல் உறுதுணையாக இருக்க விரும்புவதாகவும், இளம் தலைமுறையினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும் என ராகுல் காந்தி விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

எனில் யார் எதிர்க்கட்சி தலைவர் ஆவார்கள் என்றால், அசாம் மாநிலத்தில் இருந்து கௌரவ் கோகோய் அல்லது தென் இந்தியாவின் சசி தரூர் என சொல்லப்படுகிறது. அவர்களில் ஒருவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கலாமா என்று காங்கிரஸ் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இறுதி முடிவு, வரும் நாட்களிலேயே தெரியும்.

ராகுல் காந்தி - காங்கிரஸ்
சபாநாயகர் பதவி கோரும் கூட்டணி கட்சிகள்... நெருக்கடியில் பாஜக! விட்டுகொடுக்குமா? விட்டுப்பிடிக்குமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com