ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி... காங்கிரஸ் தலைமை அதிரடி அறிவிப்பு!

ரேபரேலி தொகுதியின் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்று கடைசிநாள் என்பதால், அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரேபரேலி
ரேபரேலி புதிய தலைமுறை

பல்வேறு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. இங்குள்ள அமேதி, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருந்தது.

ரேபரேலி தொகுதி எம்பியாக இருந்த சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ளதால், அந்த தொகுதியில், அவரது மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி களமிறங்கக்கூடும் என கூறப்பட்டது.

ரேபரேலி
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

இந்நிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடவுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. இது தேர்தல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், காங்கிரஸ் சார்பில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டநிலையில், அமேதி தொகுதியில் கிஷோரி லால் ஹர்மா போட்டியிடுகிறார் என்று அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ரேபரேலி
அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவாரா? ரேபரேலியில் யார்? - காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் குழப்பம்!

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில், 2004 முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற ராகுல்காந்தி, 2019 ஆம் ஆண்டில் தேர்தலின்போது பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில், அமேதி தொகுதியில் இம்முறை போட்டியிடாத ராகுல் காந்தி தற்போது ரேபரேலி தொகுதியில் களம் காண உள்ளார்.

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியை தொடர்ந்து 2 ஆவது தொகுதியாக ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

ரேபரேலி தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாளான இன்று ராகுல் தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேபரேலியில் பிரியங்கா, அமேதியில் ராகுல் காந்தி போட்டி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் முடிவு தேர்தல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com