“சுரங்கத்தில் 5 மீட்டர் தொலைவு வரை எந்த இடையூறுகளும் இல்லை” - ரேடார் சோதனை

உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், துளையிடவேண்டிய பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை எந்த இடையூறுகளும் இல்லை என்பது ரேடார் சோதனையில் தெரியவந்துள்ளது.
உத்தராகண்ட்
உத்தராகண்ட் முகநூல்

உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், துளையிடவேண்டிய பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை எந்த இடையூறுகளும் இல்லை என்பது ரேடார் சோதனையில் தெரியவந்துள்ளது.

சுரங்க இடிபாடுகளை துளையிடும் ஆகர் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, துளையிடும் பகுதியில் கான்கிரீட் கம்பிகளும் வந்ததால், ஆகர் இயந்திரத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த இடிபாடுகளுக்கு இடையே உள்ள தடைகள் குறித்து அறிந்துகொள்ள, GPR எனப்படும் ரேடார் மூலம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில், இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் எந்த கனரக பொருட்களும், இடிபாடுகளுக்கு இடையே இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

உத்தராகண்ட்
உத்தராகண்ட் சுரங்க விபத்து: "வெறும் 5 மீட்டர்தான்.., அதில்தான் சவாலே..!" களத்திலிருந்து தகவல்!
உத்தராகண்ட்
உத்தராகண்ட்

அடுத்த 5 மீட்டர் தொலைவிற்கு அதுபோன்ற பொருட்கள் எதுவும் இல்லை என்பதால் மீண்டும் ஆகர் இயந்திரம் கொண்டு துளையிடும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பணி முடிவடைந்ததும், மீண்டும் GPR ரேடார் மூலம் பரிசோதித்து, அடுத்த 5 மீட்டர் தொலைவுக்குள் ஏதேனும் பொருட்கள் இடையூறாக உள்ளதா என்பதை கண்டறிந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பேரிடர் மீட்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com