“விமானம் வருவதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது” - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான்
1903இல் ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே, நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் கூறியுள்ளார்.
போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களிடையே பேசிய அவர், மகாபாரத காலத்திலேயே ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த இந்தியா கற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிக்கும் முன், புஷ்பக விமானம் நம்மிடம் இருந்தது. இன்று நாம் கொண்டிருக்கும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடம் இருந்தன. இவை அனைத்தையும் நாம் மகாபாரதத்தில் படித்துள்ளோம். நம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சி அடைந்திருந்தன" எனத் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே மத்திய பிரதேச முதல்வராக இருந்த காலத்தில் சிவராஜ் சிங் சவுஹான் புஷ்பக விமானங்கள் குறித்து இவ்வாறு பேசியுள்ளார். வேறுசில பாஜக தலைவர்களும் இந்தியர்களே விமானத்தை கண்டுபிடித்தவர்கள் என்று பேசியுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், அனுமன்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் என்று கூறியது.