விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்முகநூல்

வலுக்கட்டாயமாக விவசாயிகளை அப்புறப்படுத்திய காவல்துறையினர்; போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்!

முன்னதாக மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்களிடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தது.
Published on

பஞ்சாப்-ஹரியானா கானௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறையினர், விவசாய சங்க தலைவர்களை சிலரை கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள், பகவந்த் மான் தலைமையிலான மாநில அரசும் , மோடி தலைமையிலான மத்திய அரசும் இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து ஹரியானா மற்றும் பஞ்சாபில் துணை ஆணையர்களின் அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தெரிவித்துள்ளது.முன்னதாக மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்களிடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று மத்திய வேளாண் அமைச்சர் விவசாய சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தை முடிவு குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர்கள் போராட்டம் பகுதிகளுக்கு திரும்பிய போது, எல்லை பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மேலும், சில விவசாய சங்க தலைவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர் தல்லேவாலை காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனை அடுத்து விவசாயிகளின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக இன்றைய தினம் விவசாய சங்க குழுக்கள் ஒன்றாக கூடி முடிவு எடுக்கப்படும் என்றும் நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட மாநில எல்லைக்கு முழுமையும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

போராட்டம் நடைபெற்ற பகுதியில் தற்காலிகமாக விவசாயிகள் அமைத்த குடியிருப்புகளையும் புல்டோசர்கள் கொண்டு அகற்றப்பட்டன.

விவசாயிகள் போராட்டம்
ஈரோடு | பட்டப்பகலில் நிகழ்ந்த ரவுடி ஜான் கொலை வழக்கு - இருவர் நீதிமன்றத்தில் சரண்

அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக,பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பாட்டியாலா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் புதன்கிழமை மாலை முதல் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஹரியானா காவல்துறை விவசாயத் தலைவர்களான ஜஸ்மீத் சிங் மற்றும் தேஜ்வீர் சிங் ஆகியோருக்கு வியாழக்கிழமை சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com