இருவர் நீதிமன்றத்தில் சரண்
இருவர் நீதிமன்றத்தில் சரண்pt desk

ஈரோடு | பட்டப்பகலில் நிகழ்ந்த ரவுடி ஜான் கொலை வழக்கு - இருவர் நீதிமன்றத்தில் சரண்

ஈரோட்டில் பட்டப்பகலில் ரவுடி ஜான் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Published on

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் நேற்று ஈரோடு மாவட்டம் நசியனூரில் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய மூவரையும் போலீசார், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதையடுத்து கார்த்திகேயன் உள்பட நால்வரை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி, பார்த்திபன், அழகரசன், சேதுவாசன் மற்றும் சிவக்குமார் ஆகிய ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஜீவகன் மற்றும் சலீம் ஆகிய இருவர் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஜீவகனின் அண்ணன் செல்லதுரையை ஜான் கொலை செய்ததால் தற்போது ஜான் கொலையில் காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்கள் என எண்ணி தற்போது சரணடைந்திருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருவர் நீதிமன்றத்தில் சரண்
அரியலூர் | விபத்தில் சிக்கிய காரில் நடந்த ட்விஸ்ட்.. சோதனையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இதனையடுத்து ஜீவகன் மற்றும் சலீம் ஆகிய இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கோபி சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து சரணடைந்த இருவரையும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com