புதுச்சேரி: ஏனாம் தொகுதியில் ரங்கசாமி தோல்வி! 28 வயது சுயேட்சை வேட்பாளர் வெற்றி
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள ஏனாம் பிராந்தியத்தில் நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தோல்வியை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 28 வயது இளைஞரும், சுயேட்சை வேட்பாளருமான கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றுள்ளார்.
ரங்கசாமி 16228 வாக்குகளை பெற்றுள்ளார். மறுபக்கம் கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அசோக் 16874. அதன் மூலம் ரங்கசாமியை காட்டிலும் 646 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் அவர். இந்த தொகுதியில் இதற்கு முன்னதாக மல்லாடி கிருஷ்ணா ராவ் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர் தான் ரங்கசாமியை போட்டியிட சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் சுயேட்சை உறுப்பினர்கள் ஆட்சி அமைக்க உதவுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் ஏனாம் தொகுதியில் 15 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.