இந்தியா
135 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர்!
135 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர்!
புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெறும் 135 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் 12569 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் PRN திருமுருகன் 12704 வாக்குகள் வெற்றி பெற்றார்.
இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 135 வாக்குகள்தான். திருமுருகன் மொத்த வாக்குகளில் 44.85 சதவிகிதம் பெற்றிருந்தார். ஏ.வி.சுப்பிரமணியன் 44.38 சதவிகித வாக்குகளை பெற்றது. வாக்கு சதவிகித வித்தியாசம் வெறும் 0.47 தான்.
கடந்த 2016 தேர்தலில் திருமுருகன் 3298 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.