இந்தியா
புதுச்சேரி கள நிலவரம் : உருளையன்பேட்டை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி!
புதுச்சேரி கள நிலவரம் : உருளையன்பேட்டை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி!
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில் உருளையன்பேட்டை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நேரு என்கிற குப்புசாமி வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேரு 9410 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் கோபால் 7367 வாக்குகள் பெற்றிருந்தார். கிட்டத்தட்ட 2093 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாக அவர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த அவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு இருந்தார்.