\
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற தீவிரம் காட்டும் புதுச்சேரி பாஜக

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற தீவிரம் காட்டும் புதுச்சேரி பாஜக

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற தீவிரம் காட்டும் புதுச்சேரி பாஜக
Published on

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜகவுக்கு வழங்கவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த தீர்மானத்தை கூட்டணியின் தலைமையான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமியிடம் நேரில் அளித்தனர்.

இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், பாஜகவை சேர்ந்தவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதிக திட்டங்களை புதுச்சேரிக்கு கொண்டுவர முடியும் என கூறினார். மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு அப்பதவி வழங்கப்படுமா என்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com