உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது அதிமுக - பாஜக கூட்டணி: இருகட்சிகளும் உறுதி

உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது அதிமுக - பாஜக கூட்டணி: இருகட்சிகளும் உறுதி
உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்கிறது அதிமுக - பாஜக கூட்டணி: இருகட்சிகளும் உறுதி

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்பதை இரு கட்சியினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது 9 மாவட்டங்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள் குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட்டு வெல்வோம்" என தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பா.ம.க.வைத் தவிர, பிற கட்சிகளுடனான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com