ரூ 1,400 கோடிக்கு சொத்து.. யார் இந்த பணக்கார பாஜக வேட்பாளர் பல்லவி டெம்போ?

தெற்கு கோவா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர், சுமார் 1,400 கோடி சொத்துகள் இருப்பதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.
பல்லவி டெம்போ
பல்லவி டெம்போபுதிய தலைமுறை

தெற்கு கோவா தொகுதியில் பாஜக சார்பில் பல்லவி டெம்போ என்பவர் போட்டியிடுகிறார். இவரது கணவர் ஸ்ரீனிவாஸ் தொழிலதிபராக உள்ளார். இந்தநிலையில் பல்லவி டெம்போ, தங்களுக்கு சுமார் 1,400 கோடி சொத்து இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பாத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பல்லவி டெம்போ
பல்லவி டெம்போ பாஜக

வேட்பாளர் பல்லவி டெம்போவுக்கு சொந்தமாக 255 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், அவரது கணவருக்கு சொந்தமாக 994 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

பல்லவி டெம்போ
“நாடாளுமன்ற இருக்கைகள் அதிகரிப்பு - ஜனநாயகத்தின் மீதான கத்தி” - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

தனது பெயரில் 28 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், கணவருக்கு சொந்தமாக 83 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும் பல்லவி டெம்போ தெரிவித்துள்ளார். 

துபாயில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலும், லண்டனில் 10 கோடி ரூபாய் மதிப்பிலும், தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பதாகவும், பல்லவி டெம்போ பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். தன்னிடம் 5.7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இருப்பதாக அவர் கூறியுள்ளதும்
குறிப்பிடத்தக்கது.

பல்லவி டெம்போ
மக்களவை தேர்தல் 2024 | நாளை எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com