"என்னை கேக்குறதுக்கு நீ யாரு" - புதுச்சேரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம் நடந்தது ஏன்?

புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர்களுக்கும் துணை ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
புதுச்சேரி
புதுச்சேரிபுதிய தலைமுறை

18 ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஜூன் 1 தேதிவரை நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று (ஜூன் 4) காலை 8 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மொத்தம் 543 மக்களவை தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணிக்காக தீவிர பாதுகாப்பும் அந்தந்த மாநில தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுச்சேரி
🔴LIVE: மக்களவை தேர்தல் 2024 | வாக்கு எண்ணிக்கையில் அண்ணாமலை பின்னடைவு - பிரஜ்வல் முன்னிலை!

இந்தச் சூழலில், நாட்டின் ஒரு சில இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அந்தவகையில், புதுச்சேரியை உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் துணை ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் துணை ராணுவ அதிகாரிகள் செல்போன் கொண்டு செல்ல முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டிருந்த காவல்துறையினர் செல்போன் கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இரண்டு மாத காலமாக இங்குதான் இருப்பதாகவும், அப்போது இந்த நடைமுறை எதுவும் இல்லை என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் முற்றியது.

இதேபோல வேலூர் வாக்கு எண்ணும் மையத்தில் பொது இருக்கைகள் இல்லை என கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தின் காரணமாக தபால் வாக்கு எண்ணும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

நெல்லையில் அம்பை பகுதியில் மின்னணு இயந்திர அறையின் சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்பட்டு மின்னணு இயந்திரங்கள் எடுக்கப்பட்ட நிலையில், பின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி
கர்நாடகா மாநிலம் | மக்களவை தேர்தல் களம் எப்படி உள்ளது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com