தெலங்கானாவில் காங்கிரஸூக்கு திமுக ஆதரவு!

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸூக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. “தெலங்கானா மாநில திமுக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பணிக்குழு அமைத்து பணியாற்ற வேண்டும்; காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்” என திமுக அறிவுறுத்தியுள்ளது.
திமுக ஆதரவு
திமுக ஆதரவுபுதிய த்லைமுறை

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என அம்மாநிலத்தில் செயல்பட்டு வரும் தங்கள் கட்சி அமைப்புகளை திமுக கேட்டுக்கொண்டுள்ளது.

தெலங்கானாவில் வரும் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பாரத் ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுக கட்சித்தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “தெலங்கானாவில் செயல்பட்டு வரும் திமுகவின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி அக்கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற உதவ வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் இயங்கி வரும் நிலையில், தேசிய அளவில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் INDIA என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. தற்போது திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா கூட்டணி என குறிப்பிடாமல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com