சில்வர் ஜூப்ளி விழாவில் பங்கேற்க சென்ற CEOவிற்கு நேர்ந்த சோகம்! 15அடி உயரத்தில் இருந்து விழுந்து பலி

நிறுவனத்தின் 25வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட சென்ற CEO-விற்கு நேர்ந்த சோகம்.. நிகழ்ச்சி ஏற்பாட்டில் கூண்டிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு! எங்கு நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.
உயிரிழந்த சஞ்சய் ஷா
உயிரிழந்த சஞ்சய் ஷாபுதியதலைமுறை

1999ம் ஆண்டு தொண்டங்கப்பட்ட சாஃப்டுவர் நிறுவனமான விஸ்டெக், இந்த ஆண்டு நிறுவனத்தின் 25வது தொடக்க விழாவை கொண்டாடுகிறது. பல்வேறு இடங்களில் கிளைகளை கொண்டுள்ள நிறுவனத்தின் சார்பில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வைத்து சில்வர் ஜூப்ளியை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்றபடி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபில்ம் சிட்டியில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடந்துள்ளன. 2 நாட்களுக்கு நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட நிலையில், நிறுவத்தின் தலைமை நிலைய அதிகாரி சஞ்சய் ஷா மற்றும் தலைவர் ராஜு டால்டா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

நிறுவன ஊழியர்கள் அனைவரும் மேல் தளத்தில் இருக்க, இவர்கள் இருவரையும் தனியாக ஒரு இரும்பு கூண்டில் வைத்து பிரத்யேகமாக நிகழ்ச்சி நடைபெறும் தளத்தில் அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். திட்டமிட்டபடி சஞ்சய் ஷா மற்றும் ராஜூ இருவரும் வந்தவுடன் கூண்டில் ஏறியுள்ளனர். அந்த கூண்டு கீழே இருந்து மேலே செல்ல இரு சங்கிலிகள் பிணைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு கம்பி அருந்து கூண்டு கீழே தொங்கியது. இதனால், கூண்டில் இருந்து நிலைதடுமாறிய இருவரும், 15 அடி உயரத்திலிருந்து அப்படியே கீழே விழுந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும், அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், தலைமை நிலைய அதிகாரி சஞ்சய் ஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவரான நிறுவனத்தலைவர் ராஜூ, சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த சஞ்சய் ஷா
தஞ்சாவூர்: அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்து.. வேளாங்கண்ணிக்குச் சென்ற 4 பேர் உயிரிழப்பு

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிறுவனத்தில் பணிபுரியும் மற்றொரு நபர் கொடுத்த புகாரின் பேரில் ஃபிலிம் சிட்டி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நிறுவனத்தின் 25வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க சென்ற தலைமை நிலைய அதிகாரி, பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com