தமிழ்நாட்டிற்கு மீண்டும் மீண்டும் வருகை தரும் பிரதமர் மோடி.. திமுக கையாள்வது எப்படி? பின்னணி என்ன?

சென்னையில் நேரு விளையாட்டரங்கில் "கோலா இந்தியா" போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அடிக்கடி தமிழகம் வருகை தரும் மோடியின் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் முக.ஸ்டாலின் - பிரதமர் நரேந்திர மோடி
முதல்வர் முக.ஸ்டாலின் - பிரதமர் நரேந்திர மோடி pt wep

பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை நேரு விளையாட்டரங்கில் "கோலா இந்தியா" போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் மலர்கள் தூவி, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமரின் வருகையால் சென்னை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வருவது குறித்தும், அதனுடைய பின்னணி என்ன என்பது குறித்தும், அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் வருகை குறித்து பத்திரிகையாளர் பிரகாஷ் கூறுகையில், "வட மாநிலங்கள் முழுவதுமாகவே பாஜகவினரின் சித்தாந்தம் உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் நடந்த புல்வாமா தீவிரவாத தாக்குதலை வைத்து தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். 2014 ல் ஒரு மாற்றம் வேண்டும் என இந்திய மக்கள் நினைத்தார்கள். அப்போது நிதின்கட்டக்கரியை முன்னிலை படுத்தினார்கள். பிறகு நரேந்திர மோதியயை முன்னிலைப்படுத்தி அவரை வெற்றி பெற வைத்து கடந்த 10 ஆண்டுகள் பிரதமராக உள்ளார். தற்போது தென்மாநிலங்களை பொறுத்தவரை சித்தாந்த ரீதியிலான ஒரு தெளிவு வரவேண்டும். கேரளாவில் நாராயண குரு, தமிழ்நாட்டில் பெரியார், இவர்களுடைய தாக்கம் இன்னும் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சித்தாந்தம் உள்ளது.

முதல்வர் முக.ஸ்டாலின் - பிரதமர் நரேந்திர மோடி
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2023: சென்னை வந்தார் பிரதமர்! நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!
மொய்.ராமசாமி
மொய்.ராமசாமி

வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்டது இருந்தது. இஸ்லாமியர்கள் படையெடுப்பு இருந்தது. அதை எதிர்த்து போராடிய இந்துக்கள் இருக்கன்றனர். மன்னர்கள் இருந்தனர். அதனுடைய தாக்கம் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும். ஆனால் தமிழகத்தில் உள்ள தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் வித்தியாசமாக உள்ளனர். அதனால் தான் தமிழகத்தில் பாஜகவில் வெற்றி பெற முடியவில்லை.

தமிழகத்தின் சிறப்பு கலாச்சாரமான வேஷ்டி கட்டுவது, திருக்குறள் வாசிப்பு உள்ளிட்ட தமிழை தூக்கி பிடிக்கும் முயற்சிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் செய்ய மறுப்பது ஒன்று தான், முன்னேறிய வகுப்பினரின் சாதிய வாதத்தை முன்னெடுக்கின்றனர். அதை சனாதனம் என்று சொல்கிறார்கள். இதற்காக தமிழகத்தில் பெரும் போராட்டம் நடந்துள்ளது இதை ஏற்க மறுக்கிறார்கள். பெரியார் சித்தாந்தம் கடவுள் மறுப்பு மட்டுமே கிடையாது. அதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளது. பெரியாரின் கொள்கைகளை மறித்து இவர்கள் புதியதாக உருவாக்குகிறார்கள்.

பத்திரிகையாளர் பிரகாஷ்
பத்திரிகையாளர் பிரகாஷ்

பிரதமர் மோடிக்கு தனித்துவம் உள்ளது. அவர் ஒரு நல்ல தலைவர். அவரை நாங்கள் மதிக்கின்றோம். வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த பிறகு திமுக உள்ளே சென்றது. பின்னர் வாஜ்பாய் சேர்ந்து அரசியல் பயணத்தை தொடங்கினர். அவர்கள் இந்துத்துவா கொள்கைக்குள் வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி விஸ்வரூப இந்துத்துவத்தை கடைபிடிக்கிறார். திமுகவினர் நிர்வாக ரீதியாக பிரதமர் மோடியை பிரித்து பார்க்கிறார்கள். பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி உள்ளது" என்றார்.

முதல்வர் முக.ஸ்டாலின் - பிரதமர் நரேந்திர மோடி
`உரிமையிலேயே பேசினார்’ Vs `என் பொண்ணு மாதிரி’- திமுக மேயர் & அமைச்சர் நேருவின் விளக்கம்!

இது தொடர்பாக பேசிய வலதுசாரி ராமசாமி மெய்யப்பன், "தமிழகத்தை பிரதமர் ஒரு முக்கியமான மாநிலமாகத்தான் பார்க்கிறார். தமிழை அவர் உயர்த்தி பிடிப்பதில் இருந்தே தெரிகிறது. அவர் தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. பிரதமர் எங்கு சென்றாலும் பல திட்டங்களுடன் தான் செல்வார். தமிழகத்தில் உள்ள பாஜகவினரை பிரதமர் சந்திக்கிறார் என்றால் அதற்கு பல அரசியல் காரணங்கள் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து சந்திக்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளது. தேர்தலை சந்திக்க எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். மக்களை சந்திக்க பாஜகவினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com