குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்முகநூல்

சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசுத் தலைவர் திரளபதி முர்மு!

இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் திரளபதி முர்மு பேட்மிண்டன் விளையாடிய காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
Published on

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருது பெற்ற வீராங்கனைகளுடன் பொதுமக்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் திரளபதி முர்மு பேட்மிண்டன் விளையாடினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்

அப்போது அரங்கில் இருந்த பலரும் இதனை ஆர்வத்துடன் அதை கண்டுரசித்து உற்சாகப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, “உலக அரங்கில் பெண்கள், வீராங்கனைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பேட்மிண்டன் விளையாட்டின் மையமாக இந்தியா உருவெடுக்க ஊக்கம் அளிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் இச்செயல் அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்
தலைப்புச் செய்திகள்|ஆஸ்திரியாவில் பிரதமர் பெருமிதம் முதல் சாய்னா உடன் விளையாடிய குடியரசுத்தலைவர் வரை

மேலும் சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் பேட்மிண்டன் விளையாடியது, விளையாட்டின் மீது அவர் இயற்கையாகவே பற்றுகொண்டவர் என்பதை காட்டுவதாக பதிவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com