பாபா வங்காவின் கணிப்பு... 2025 ஆம் ஆண்டு இதெல்லாம் நடக்குமா?
ஒவ்வொரு வருடமும் எப்படி இருக்கும், என்னென்ன முக்கிய நிகழ்வுகள் நடக்கும் என்பது குறித்து கணிப்புகள் வெளியாகும். அதில் பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. அதிக மக்கள் அவரது கணிப்புகளை பின்தொடர்ந்தும் வருகின்றனர். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து எச்சரிக்கை குறிப்புகளை பாபா வங்கா முன்பே கணித்து சொன்ன விஷயங்கள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1911 ஜனவரி 31 அன்று பிறந்த பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் இயற்பெயர் வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவா. தன்னுடைய 12 வயதில் பார்வையை இழந்த இவர், அதற்கு பின் எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இவர் கணித்த இரட்டைக்கோபுர தாக்குதல், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்டவை நடந்ததாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான கணிப்புகளாக அவர் குறிப்பிட்டவை தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது 2025 ஆண்டு சுனாமி, சூறாவளி உள்ளிட்ட பேரழிவு ஏற்படும். இதனால் உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் உள்ளிட்டவை ஏற்படும். எனவே, அவசர காலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என கூறியிருந்தார். அவர் கூறியதற்கேற்ப உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே அவர் கணிப்பு நடந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பாபா வங்கா இந்த ஆண்டுக்கு மட்டுமில்லாமல் 5079 ஆண்டுவரை அந்த ஆண்டுகளில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து கணித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது கணிப்புப்படி 5079–ஆம் ஆண்டிற்கு பிறகு உலகம் இருக்காது அழிந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.