இருவர் போக்சோவில் கைதுpt desk
குற்றம்
வேலூர் | சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கா கணவர் உட்பட இருவர் போக்சோவில் கைது
வேலூரில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: ச.குமரவேல்
தாய் தந்தை இல்லாத சூழலில் 16 வயது சிறுமி ஒருவர் அக்கா உறவுமுறையான உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சிறுமியிடம் போலீசார், மேற்கொண்டனர்.
கைதுபுதியதலைமுறை
விசாரணையில் தனது அக்கா கணவர் பிரேம்குமார் தான் இதற்கு காரணம் என்றும் அதற்கு உடந்தையாக அவருடைய காதலன் சக்திவேல் இருந்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து இருவரை தேடி வந்த நிலையில், தற்போது இருவரையும் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.