கர்நாடகாவில் முழுஅடைப்பு; தீவிரப்படுத்தப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே மோதல் முற்றியுள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா
கர்நாடகாpt web

காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே மோதல் முற்றியுள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா லாரி
கர்நாடகா லாரிபுதிய தலைமுறை
கர்நாடகா
“கர்நாடகாவுக்கு இன்று லாரிகள் இயக்கவேண்டாம்” - தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தல்

இதையொட்டி செப் 29 நள்ளிரவு 12 மணி முதல் செப் 30 நள்ளிரவு 12 மணி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் பேருந்துகள், தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவிற்குள் நுழைய தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக காவல்துறையினர் மாநில எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தமிழகத்தில் இருந்து கர்நாடாவிற்கு செல்லும் அம்மாநில பேருந்துகள், வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் வாகனங்கள், தலமலை வனச்சாலையை பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் கர்நாடகாவில் பயணிக்கும் தமிழக சரக்கு வாகனங்கள், பொதுவெளியில் நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா
“இதெல்லாம் தேவையா?” - பேசிக்கொண்டிருந்த சித்தார்த்தை கட்டாயப்படுத்தி வெளியேற்றிய கன்னட அமைப்பினர்!

தொடர்ந்து தமிழகத்தில் இருந்து நாள்தோறும் கர்நாடக மாநிலத்திற்கு சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது தமிழக எல்லையான ஒசூர் அருகே அத்திப்பள்ளி வரை மட்டுமே பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிவுறுத்தலை ஒட்டுனர் நடத்துனர்களுக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவிற்குள் பேருந்துகள் சென்றால் கன்னட அமைப்புகளால் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் எனக்கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகளை எல்லை வரை மட்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரு மாநில எல்லைப் பகுதியில் சூழலை பொறுத்து கண்காணித்து பேருந்து சேவை நடைபெறும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com