“மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று..” - பிரசாந்த் கிஷோர் மறைமுக விமர்சனம்!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும் என, பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் எதிர்க்கட்சியினரை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்PT WEB

பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், “இந்த தேர்தலின் முடிவைப் பற்றிய எனது மதிப்பீட்டைக் கண்டு திகைப்பவர்கள், ஜூன் 4ஆம் தேதியன்று போதுமான அளவு தண்ணீரை கையில் வைத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். தண்ணீர் குடிப்பது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்றும் கிண்டலாக பிரசாந்த் கிஷோர் அளித்துள்ளார்.

மேலும், “2021ஆம் ஆண்டு மே 2-ம் தேதி மற்றும் மேற்கு வங்கத்தை நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் பிரசாந்த் கிஷோர் எக்ஸ் சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோர்
”மூன்றாம் உலகப் போருக்கு இன்னும் சில வாரங்களே இருக்கு; இதெல்லாம் நடக்கும்” - இந்திய ஜோதிடர் கணிப்பு!

ஏற்கெனவே, ”2019 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற இடங்களைப் போலவோ அல்லது அதைவிட சற்று கூடுதலாகவோ இந்த முறை பாஜக ஆட்சியை பிடிக்கும். அவர்கள் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கான எந்த அபாயத்தையும் நான் பார்க்கவில்லை” என்று பிரசாந்த் கிஷோர் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.

இதனால் அவர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும் என்ற கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர்
தோண்டத் தோண்ட அதிர்ச்சி! NIA கொடுத்த துப்பு; கொத்தாக மாட்டிய பாலியல் தொழில் சிண்டிகேட் கும்பல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com