\
Port Blair to Sri Vijaya puram
Port Blair to Sri Vijaya purampt desk

போர்ட் பிளேயர் டூ ஸ்ரீ விஜயபுரம் |அந்தமான் நிகோபர் தலைநகர் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு – அமித்ஷா

அந்தமான் நிகோபர் தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை, ஸ்ரீ விஜயபுரம் என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Published on

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காலனித்துவ முத்திரையில் இருந்து நாட்டை விடுவிக்க போர்ட் பிளேயர் என்ற பெயரை, ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

amit shah
amit shahFile pic

முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீவிஜயபுரம் நமது சுதந்திர போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் - நிகோபர் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிப்பதாக குறிப்பிட்டுள்ளார். சுதந்திர போராட்ட வரலாற்றில் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு என அமித்ஷா கூறியுள்ளார்.

சோழப் பேரரசின் கடற்படை தளமாக செயல்பட்ட தீவுப்பகுதி, தற்போது நம்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்குகிறது எனவும் தெரிவித்துள்ளார். சுதந்திரத்துக்காக போராடிய சாவர்க்கர் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இடமும் இதுதான் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com