5-ஆம் கட்ட மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு? - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

5-ஆம் கட்ட மக்களவை தேர்தலில் சுமார் 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐந்தாம் கட்ட தேர்தல்
ஐந்தாம் கட்ட தேர்தல்முகநூல்

5-ஆம் கட்ட மக்களவை தேர்தலில் சுமார் 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13 ஆகிய தேதிகளில், நான்கு கட்டத் தேர்தல்கள் நடைபெற்றன.

மக்களவை தேர்தல் 2024 | வாக்கு
மக்களவை தேர்தல் 2024 | வாக்குபுதிய தலைமுறை

379 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், ஐந்தாம் கட்டமாக 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளில் 57.79%, மகாராஷ்டிராவில் உள்ள 13 தொகுதிகளில் 54.29%, மேற்குவங்கத்தில் உள்ள 7 தொகுதிகளில் 74.65% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஐந்தாம் கட்ட தேர்தல்
தலைப்புச் செய்திகள்| சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை To தமிழ்நாட்டில் வெளுத்துவாங்கிய கனமழை!

இதேபோல், பீகாரில் உள்ள 5 தொகுதிகளில் 54.85%, ஒடிசாவில் உள்ள 5 தொகுதிகளில் 67.59 % ,ஜார்க்கண்டில் உள்ள 3 தொகுதிகளில் 63.07% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியில் 56.73 விழுக்காடும், லடாக்கில் ஒரு தொகுதியில் 69.62 விழுக்காடும் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com