அலிகார் சம்பவம்
அலிகார் சம்பவம்ட்விட்டர்

உ.பி.: பாஸ்போர்ட் விசாரணையின்போது போலீசாரின் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்.. நேரில் பார்த்த சாட்சி!

உத்தரப்பிரதேசத்தில் பாஸ்போர்ட் விசாரணைக்குச் சென்ற பெண்ணை, போலீசார் ஒருவர் தற்செயலாகச் சுட்டது நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இஷ்ரத். இவர் சவூதி அரேபியாவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக பாஸ்போர்ட் பெறவும் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே, அலிகாரில் உள்ள போலீஸ் நிலையத்தில் இஷ்ரத்தின் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக இஷ்ரத் நேற்று (டிச.8) அலிகார் போலீஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா துப்பாக்கியைப் பரிசோதித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த துப்பாக்கி சுட்டது.

இதில், பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்கு வந்திருந்த இஷ்ரத் தலைமீது குண்டுபாய்ந்தது. உடனடியாக அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக போலீஸார், இஷ்ரத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இஷ்ரத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் தலைமறைவானார். அந்த போலீஸ்காரர், தனது துப்பாக்கியை மெல்ல அசைத்துக்கொண்டிருந்ததாகவும், அதைத் தற்செயலாக மேலே உயர்த்தியபோது அதில் இருந்து குண்டு வெளியே வந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மழைநீரில் கச்சாஎண்ணெய் கலப்பு: ”நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை?” பசுமைத் தீர்ப்பாயம் சரமாரி கேள்வி?

இதுகுறித்து மாவட்ட மூத்த காவல்துறை அதிகாரி கலாநிதி நைதானி, “இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மாவின் அலட்சியத்தால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறது, மேலும் சம்பவத்தின் காட்சிகளை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், அவரது பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு பொறுப்பான அதிகாரி, லஞ்சம் கேட்டு துன்புறுத்தப்பட்டதாக குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், அதிகாரி அவரை துப்பாக்கியால் சுட்டார் என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நேரில் பார்த்த சாட்சியான ஒருவர் விளக்கிக் காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: வெள்ள பாதிப்பு: நிவாரண உதவிகள் செய்யும் தன்னுடைய ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை; கசிந்த ஆடியோ!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com