வெற்றி துரைசாமியை 7வது நாளாக தேடிவரும் காவல்துறை... சமீபத்திய தகவல் என்ன?

இமாச்சலப் பிரதேசத்தில், சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளான நிலையில், அவரை தேடும் பணியில் அம்மாநில போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
காணாமல் போன வெற்றி துரைசாமியை தேடுதல்
காணாமல் போன வெற்றி துரைசாமியை தேடுதல் NGMPC22 - 147

கடந்த வாரம் சுற்றுலாவிற்காக இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்த வெற்றி துரைசாமியின் கார், சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் பலியான நிலையில், வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காணாமல் போன வெற்றி துரைசாமியை தேடுதல்
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி

இந்நிலையில் சட்லஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியை தொடர்ந்து ஏழாவது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வெற்றி துரைசாமியின் உடல் எடை மற்றும் உயரம் கொண்ட ஒரு பொம்மையை ஆற்றல் வீசி , பொம்மை செல்லும் பாதையை வைத்து வெற்றி துரைசாமியை தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இத்தேடுதலில் ஸ்கூபா டிரைவிங் வீரர்கள், இமாச்சலப் பிரதேசத்தின் காவல்துறையினர், தேசிய பேரிடர் படையினர், மீட்பு படையினர் என பல்வேறு தரப்பினரும் வெற்றி துரைசாமியை மீட்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக தன் மகன் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1 கோடி தரப்படும் என சைதை துரைசாமி வேதனையோடு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com