டெல்லி: 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல்.. காவல்துறை விசாரணை

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், “பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம்; வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.. சோதனை தொடர்கிறது” என டெல்லி அதிகார வட்டங்கள் தெரிவித்துள்ளன.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்pt web

100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் இன்று காலை பல்வேறு முக்கிய பகுதிகளில் உள்ள 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக உடனடியாக பெற்றோர்கள் மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், குழந்தைகள் அவசர அவசரமாக பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்த காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினர் உடன் பள்ளிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முதல் கட்ட விசாரணையில் பள்ளிகளுக்கு போலியான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பதிவில், “இன்று காலை சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டு டெல்லி காவல்துறை சோதனை செய்து வருகின்றனர். இதுவரை எந்த பள்ளிகளிலும் எதுவும் கிடைக்கவில்லை. காவல்துறை மற்றும் பள்ளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். பெற்றோர்களும் பீதியடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பிரஜ்வலின் EX - டிரைவர் வெளியிட்ட வீடியோ.. சிக்கலில் பாஜக தலைவர்.. டிரைவர் கார்த்திக் கூறியது என்ன?

காலை 4.15 மணிக்கு வந்த இமெயிலில் வந்த மிரட்டல் 

தென்மேற்கு டெல்லியின் துணை காவல் கமிஷ்னர் ரோகித் மீனா இதுகுறித்து கூறுகையில், “காலை 4.15 மணியளவில் ஒரே மின்னஞ்சலில் இருந்து பல பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. நாங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கினோம். மாணவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பினோம். அனைத்து பள்ளிகளிலும் சோதனை நடந்து வருகிறது. மாணவர்களின் பெற்றோர்கள் யாரும் பயப்பட வேண்டாம். நாங்கள் ஒவ்வொரு பள்ளி நிர்வாகத்துடனும் தொடர்பில் இருக்கின்றோம்” என தெரிவித்திருந்தார்.

டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா கூறுகையில், “மக்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது புரளியாகத்தான் தெரிகிறது. டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக டெல்லி காவல்துறை கமிஷ்னரிடம் பேசி விரிவான அறிக்கை கேட்டுள்ளேன். எந்த தவறும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தார்.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
17 ஆண்டு கால கொலை வழக்கு - கடைசி நேரத்தில் பாஜகவை வெற்றி பெறவைத்த காங். வேட்பாளர்!

ரஷ்யாவில் இருந்து வந்த மிரட்டல்

முன்னதாக நேற்று மாலை டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள 50 முதல் 100 பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து இன்று காலையும் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலும் தனியார் பள்ளிகள் உள்ள நிலையில் மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரியை கண்டறியும் பணியிலும் காவல் துறை ஈடுபட்டனர்.

இன்று காலை டெல்லி சாணக்யாபுரியில் உள்ள சான்ஸ்கிரிதி பள்ளி, மயூர் விஹார் பகுதியில் உள்ள மதர் மேரி பள்ளி, துவாரகா, நொய்டா, வசந்த் குஞ் பகுதிகளில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி, சாக்கெட் பகுதியில் உள்ள அமிட்டி போன்ற பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளான பள்ளிகளின் முழுப் பட்டியல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரே ஐபி முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com