மெய் சிலிர்க்க வைக்கும் குரலால் ‘வந்தே மாதரம்‘... 4 வயது சிறுமியை பாராட்டிய பிரதமர்...!
வந்தே மாதரம் பாடலை தனது மழலை குரலில் அழகாக பாடிய 4 வயது சிறுமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயதான எஸ்தர் நாம்தே என்ற சிறுமி தனது இனிமையான மழலைக் குரலில் பாடிய ‘வந்தே மாதரம்’ பாடல், கேட்போரை மெய்சிலிர்க்கச் செய்தது. இதனை ஒரு ஆல்பம் போன்று எடுத்து சிறுமி வீடியோவாக வெளியிட, அதனை மிசோரம் மாநில முதல்வர் சோரம்தாங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, அவ்வளவுதான், சிறுமி எஸ்தர் நாம்தேவின் வந்தே மாதரம் பாடல் இந்தியா முழுக்க வைரலாகி, பாராட்டுகளை குவித்தது.
இந்நிலையில் மிசோரம் மாநில முதல்வர் பதிவிட்ட வீடியோவை, பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரி-ட்வீட் செய்திருக்கிறார்.
மிகவும் அற்புதமான மற்றும் மதி மயங்கக்கூடிய எஸ்தர் நாம்தேவின் பாடலை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் என்று மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.