’நகர நக்சல்கள்’ குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தான், வல்லபாய் படேலின் 151-வது பிறந்தநாள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தினக் கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம் கேவடியாவில் அமைந்துள்ள 'ஒற்றுமைக்கான சிலை' வளாகத்தில் அக்டோபர் 30 மற்றும் அக்டோபர் 31 தேதிகளில் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்துகொண்டார். தொடர்ந்து, இவ்விழாவில் அவர் பேசியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், "இந்தியாவில் நக்சலிசத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு அது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டில் நாட்டின் 126 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 2026-க்குள் அந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வன்முறை ஒடுக்கப்பட்டாலும், 'நகர நக்சல்கள்' மூலமாக வரும் ஆபத்து இன்னும் நீங்கவில்லை. சமூக வலைதளங்கள் தவறான தகவல்களைப் பரப்பி நாட்டைப் பிரிக்க நினைக்கும் இத்தகைய சக்திகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

