\
Low-Pressure System Over Andaman Sea Likely to Become Cyclone Today
RAINANI

’முரசு’ புயல் இன்று உருவாக வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவு தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் மேலும் வலுவடைந்து , நாளை (நவம்பர் 20) மாலை ஆந்திராவை ஒட்டி கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் நாகை,கடலூர், சென்னை, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் தொலைதூரப் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது. மேலும், நாளை நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் உருவாகும் பட்சத்தில் இதற்கு ‘முரசு’ எனப் பெயர் சூட்டப்படும்.

Low-Pressure System Over Andaman Sea Likely to Become Cyclone Today
நவீன தமிழ்நாட்டின் பிறந்தநாள் இன்று.. சென்னை மாகாணம் பிரிந்த கதை!