“உங்களால் கைவினை தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும்” மக்களிடம் கோரிக்கை வைத்த பிரதமர்

தீபாவளிக்கு மக்கள் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களையே வாங்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிpt web

தீபாவளி என்றால் பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு, காரம் போன்ற உணவுப் பொருட்களின் விற்பனை அதிகளவில் இருக்கும். தீபாவளி வாரத்தில் நடந்த விற்பனை பொருளாதாரம் குறித்தான பேச்சும் ஒரு பக்கம் நிகழும். பெரிய கடைகள் அறிவிக்கும் சலுகைகளும் இதில் அடக்கம். மக்கள் பொருட்களை வாங்க ஆர்வம் செலுத்துவார்களே தவிர்த்து உள்நாட்டு உற்பத்தியா என்று பிரித்து பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான். சிலர் அத்தகைய பொருட்களையும் தேடிப்போகக் கூடும்.

இந்நிலையில் பிரதமர் மோடி, தீபாவளிக்கு மக்கள் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களையே வாங்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் தீபாவளிக்கு உள்நாட்டு தயாரிப்பு பொருட்களையே வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கி அதை செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். நமோ செயலியில் கூட விவரங்களை பதிவிடலாம்.

உள்நாட்டு தயாரிப்பு பொருட்களையே வாங்க உறவினர்கள், நண்பர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இது ஒரு இயக்கமாக மாற வேண்டும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடிPT

மக்கள் சுற்றுலா அல்லது யாத்திரை செல்லும் இடங்களில் கூட உள்ளூர் தொழிலாளர்கள் தயாரித்த பொருட்களையே வாங்கவேண்டும். உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்குவதன் மூலம் நம் நாட்டு கைவினை தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com