”இந்தியா என்றால் வட இந்தியா தானா?” - பிரதமர் மோடியின் கேள்வியும், எ.வ.வேலு பேச்சின் முழுவிபரமும்!

இந்தியா குறித்து பேசியிருந்த தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக, பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்தார்.
எ.வ.வேலு, ஸ்மிருதி இரானி, மோடி
எ.வ.வேலு, ஸ்மிருதி இரானி, மோடிட்விட்டர்

தமிழக அமைச்சர் எ.வ.வேலு பேசியது என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் பேசிய தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ”ஒருகாலத்தில் இந்தியா என்பதன் மீது நமக்கு பெரிய தாக்கம் இருப்பதில்லை. இந்தியா என்கிற வார்த்தைக்கு நமக்கு எல்லாம் எந்தக் காலத்தில் தாக்கம் இருந்திருக்கிறது? நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். இந்தியா என்றால், அது வடக்கில் இருக்கும் ஓர் ஊர். நம்மூர் தமிழ்நாடுதான். முடிந்தால் நம்மூரில் திராவிட நாடு என ஆக்க யோசிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ஒன்றரை மணி நேரமாக மணிப்பூரைப் பற்றி பேசாத மோடி; கடுப்பாகி வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்! ஆனால்..?

எ.வ.வேலு
எ.வ.வேலு

எ.வ.வேலுவின் பேச்சுக்கு ஸ்மிருதி இரானி பதிலடி!

எ.வ.வேலுவின் சர்ச்சை குறித்த பேச்சு, நேற்று (ஆகஸ்ட் 9) நாடாளுமன்ற மக்களவையில், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது எதிரொலித்தது. இதுகுறித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி,

“இந்தியா என்பது வட இந்தியா என தமிழ்நாட்டில் ஒரு தலைவர் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்தியா என்பது வடஇந்தியா மட்டும் தானா?. ராகுல் காந்திக்கு தைரியம் இருந்தால், இந்தியாவை இழிவுபடுத்தும் திமுகவினரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவியுங்கள். UPA கூட்டணியில் உள்ள தமிழக கட்சிக்காரர்தான் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். நான் மீண்டும் கூறுகிறேன். நான், இன்று காந்தி குடும்பத்திடம், காங்கிரஸிடம் கேட்க விரும்புகிறேன்.

இதையும் படிக்க: ”இந்த சம்பவத்தால் தற்கொலை செய்ய நினைத்தேன்”-கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மற்றொரு மணிப்பூர் பெண்

smriti irani
smriti iranipt web

ராகுல் காந்திக்குச் சவால்விட்ட ஸ்மிருதி இரானி!

இந்தியா என்பது வெறும் வடஇந்தியா மட்டும்தானா? தைரியம் இருந்தால், இந்தியா மீது நம்பிக்கை இருந்தால் உங்களுடைய கூட்டணி கட்சிக்காரருக்கு சரியான பதிலடி கொடுங்கள். மணிப்பூர் பிரிக்கப்பட்டதாக, பிளவு அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி கூறினார். மணிப்பூரை பிரிக்க முடியாது. அது இந்தியாவின் ஒரு பகுதி. பிரிக்க முடியாது. நீங்கள் மணிப்பூரை பற்றி பேசும் முன் தமிழ்நாட்டை பற்றி பேசுங்கள். எங்களை பற்றி பேசும் முன் உங்கள் கூட்டணி திமுக பற்றி பேசுங்கள்” எனக் கடுமையாகப் பேசி இருந்தார்.

இதையும் படிக்க: 3 நாட்கள் மீதமிருக்கையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைக்கப்பட்டது ஏன்?- பின்னணி இதுதான்!

இந்த நிலையில், பிரதமர் மோடியும் இதுகுறித்து பேசியுள்ளார். எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது 3வது நாளாக இன்று விவாதம் தொடங்கியது. இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, எ.வ.வேலுவின் சர்ச்சை குறித்த பேச்சுக்கும் பதிலடி கொடுத்தார்.

மோடி
மோடிபுதிய தலைமுறை

”தமிழ்நாடு இந்தியாவின் அங்கம் இல்லையா?” - மோடி கேள்வி

அவர், “இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் அமைச்சர் ஒருவர், இது இந்தியா பற்றிய பிரச்னை அல்ல; தமிழ்நாடு பற்றியது என்று ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். பெரிய பெரிய தலைவர்களை கொடுத்த தமிழ்நாட்டில் இருந்து இப்படியான அமைச்சர்களும் வந்திருக்கிறார்கள். வடஇந்தியாதான் 'இந்தியா' என்கிறார். திமுக அமைச்சர் ஒருவர்; தமிழ்நாடு இந்தியாவின் அங்கம் இல்லையா? ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல் கலாம் ஆகியோர் பிறந்த தமிழ்நாட்டை எப்படிப் பிரித்து பார்க்க முடியும்” என்றார்.

இதையும் படிக்க: ”போருக்கு ஆயத்தமாகுங்கள்” - அதிகாரிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com