சாதிவாரி அரசியல் - காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கண்டனம்
பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் எவ்வளவு மக்கள் தொகை உள்ளதோ அந்த அளவிற்கு உரிமை வழங்கப்பட வேண்மென்று ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மக்கள் தொகையில் அதிகம் உள்ளது ஏழைகள்தான். அவர்களுக்குத்தான் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். மக்கள் தொகை அடிப்படையில் உரிமைகளை முடிவு செய்ய வேண்டுமென்றால் பெரும்பான்மை சமூகத்திற்கு அனைத்து உரிமைகளும் கிடைத்துவிடும்.
சிறுபான்மையினருக்கு எந்த உரிமையும் கிட்டாது. மக்களை சாதி மத அடிப்படையில் துண்டாட காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் கட்சி ஊழலை வளர்க்கும் கட்சி” என்று குற்றம் சாட்டினார்.